Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

ரீல்ஸ் வீடியோக்களுக்கு கேமராமேனாக இருந்த இளைஞரை திருமணம் செய்த 3 சகோதரிகள்; உத்தரபிரதேசத்தில் பரபரப்பு

ரீல்ஸ் வீடியோக்களுக்கு கேமராமேனாக இருந்த இளைஞரை திருமணம் செய்த 3 சகோதரிகள்; உத்தரபிரதேசத்தில் பரபரப்பு
உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தின் ஹசன்பூர் அருகிலுள்ள தௌரியா கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சரோஜ் (20), சாவித்திரி (19), சந்தோஷ் (18) ஆகிய மூன்று சகோதரிகள் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர்கள். தினமும் புதிய வீடியோக்களை வெளியிட்டு வந்த இவர்களுக்கு லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.இவர்களின் ரீல்ஸ் வீடியோக்களை படமாக்கும் கேமராமேனாக ஷியாம்பூரி கிராமத்தைச் சேர்ந்த விகாஸ் (20) பணியாற்றி வந்துள்ளார். மேலும், இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட பல வீடியோக்களில் மூன்று சகோதரிகளுக்கும் கணவராக வரும் கதாபாத்திரங்களிலும் அவர் நடித்துள்ளார்.இதற்கிடையில், பெற்றோர் தனித்தனியாக திருமணம் செய்து வைத்தால் வெவ்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும்; அதனால் இணைந்து ரீல்ஸ் வீடியோக்களை உருவாக்க முடியாது என்ற எண்ணத்தில், மூவரும் விகாஸை திருமணம் செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அதன்படி, கடந்த 17-ஆம் தேதி கிராமத்தில் உள்ள சாமுண்டா தேவி கோவிலில் இந்த திருமணம் நடைபெற்றது.திருமண நிகழ்வின் வீடியோவை மூன்று சகோதரிகளும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
Advertisement
அந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பல்வேறு தரப்பினரிடையே விவாதத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது.இதையடுத்து, சுமார் 6 நிமிடங்கள் கொண்ட விளக்க வீடியோ ஒன்றை அவர்கள் வெளியிட்டனர். அதில், சிறுவயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்ததால் பிரிந்து வாழ முடியாது என்றும், பெற்றோர் தனித்தனியாக வரன் பார்க்கத் தொடங்கியதால் ஒரே நபரை திருமணம் செய்து ஒன்றாக வாழ முடிவு செய்ததாகவும் தெரிவித்தனர். மேலும், இந்த திருமணம் முழுமையாக தங்களது விருப்பத்தின் பேரிலேயே நடைபெற்றதாக கூறிய அவர்கள், புராணங்களில் தசரத மன்னருக்கு மூன்று மனைவிகள் இருந்ததை எடுத்துக்காட்டி, தாங்கள் செய்ததில் என்ன தவறு என கேள்வி எழுப்பினர். எந்த மதத்தையும் அவமதிக்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும் அவர்கள் விளக்கம் அளித்தனர்.இந்த விவகாரம் குறித்து இதுவரை எந்தவித புகாரும் பெறப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு