Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 20 செப்டம்பர் 2026 | 4 புரட்டாசி பராபவ வருடம்

ராஷ்மிகாவின் “மைசா” படத்தின் டீசர் வெளியானது

ராஷ்மிகாவின் “மைசா” படத்தின் டீசர் வெளியானது

நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் ‘மைசா’ திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில் உருவாகும் இந்த தெலுங்கு திரைப்படம், ஆக்‌ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் தயாராகி வருகிறது. இதில் கோண்டு இனத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்ணாக ராஷ்மிகா நடித்துள்ளார். இதுவரை அவர் ஏற்றிராத வகையிலான மிகவும் தீவிரமான கதாபாத்திரமாக இது உருவாகியுள்ளது. உடல் மற்றும் உணர்வு ரீதியாக பல்வேறு சவால்களை சந்திக்கும் கதாபாத்திரமாக ராஷ்மிகாவின் பாத்திரம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. ‘மைசா’ படத்தின் முக்கிய காட்சிகளில் ஒன்றாக ராஷ்மிகா இடம்பெறும் நீருக்கடியில் நடைபெறும் சண்டைக்காட்சி இடம்பெற்றுள்ளது. பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்திய சினிமாவின் குறிப்பிடத்தக்க நீருக்கடிச் சண்டைக்காட்சிகளில் இதுவும் ஒன்றாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement
இந்த காட்சிகளை படமாக்கியபோது ராஷ்மிகாவின் வலது இடுப்பில் காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஷ்மிகாவின் ஆக்ரோஷமான தோற்றமும், இதுவரை காணாத கதாபாத்திரமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. இதனிடையே, ‘மைசா’ திரைப்படம் நவம்பர் 27-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு வெளியிடப்பட்ட புதிய போஸ்டரில், ராஷ்மிகா கையில் ரத்தக்கறை படிந்த ஈட்டியுடன் ஆக்ரோஷமான தோற்றத்தில் காணப்படுகிறார். இந்த நிலையில், தற்போது ‘மைசா’ படத்தின் டீசரும் வெளியாகியுள்ளது. “ஒரு மகளின் வாக்குறுதி” என்ற மையக்கருத்தை முன்வைக்கும் வகையில் டீசர் அமைந்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,285
🥈 Silver ₹260.00
Petrol ₹107.77
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு