Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 13 அக்டோபர் 2026 | 27 புரட்டாசி பராபவ வருடம்

யூனிட் ரூ.35-க்கு மின்சாரம் கொள்முதலா? தவெக அரசின் நிர்வாகம் குறித்து வானதி சீனிவாசன் கேள்வி

யூனிட் ரூ.35-க்கு மின்சாரம் கொள்முதலா? தவெக அரசின் நிர்வாகம் குறித்து வானதி சீனிவாசன் கேள்வி

தமிழகத்தில் மின்வெட்டைச் சமாளிக்க ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 என்ற அதிக விலைக்கு வாங்குவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிப்பதாக பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். மேலும், எந்த நிறுவனத்திடம் இருந்து, எவ்வளவு மின்சாரம், என்ன அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுகிறது என்பதை தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்படும் மின்வெட்டுப் பிரச்சினையைச் சுட்டிக்காட்டியுள்ளார். தவெக அரசு பொறுப்பேற்றது முதலே மின்வெட்டு நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மின்சாரத் தேவையை முன்கூட்டியே கணித்து, குறைந்த செலவில் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கான திட்டமிடல் அவசியம் எனத் தெரிவித்துள்ளார். ஆனால், கடைசி நேரத்தில் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பது, மின்வாரியத்தின் திட்டமிடல் மற்றும் நிர்வாகம் குறித்து கேள்விகளை எழுப்புவதாக அவர் விமர்சித்துள்ளார். ஏற்கெனவே கடன் சுமையில் உள்ள மின்வாரியத்திற்கு, அதிக விலையிலான மின்சாரக் கொள்முதல் கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதனால் எதிர்காலத்தில் மின்கட்டணம் உயர்ந்து, அதன் சுமை பொதுமக்கள் மீது விழக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement
மேலும், சிறு, குறு தொழில்கள், ஜவுளித் தொழிற்சாலைகள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களின் உற்பத்திச் செலவுகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மின்சாரத் தேவையை முறையாகத் திட்டமிடாததால் ஏற்படும் கூடுதல் செலவுகளை மக்கள் வரிப்பணத்தின் மூலம் ஈடுகட்ட வேண்டிய நிலை உருவாகும் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, ஒரு யூனிட் ரூ.35 என்ற விலையில் எவ்வளவு மின்சாரம் வாங்கப்படுகிறது, எந்த நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது, அதற்கான அடிப்படை என்ன ஆகிய விவரங்களை தமிழக அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். அதேபோல், பொதுமக்கள் மீது கூடுதல் மின்கட்டணச் சுமையைச் சுமத்துவதைத் தவிர்க்கவும், நீண்டகால மின்தேவையைப் பூர்த்தி செய்யவும் செயல்படாமல் உள்ள அனல்மின் நிலையங்கள் மற்றும் நீர்மின் நிலையங்களின் அலகுகளை மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். வளர்ச்சிக்கு உதவும் நீண்டகாலத் தீர்வுகளை அரசு முன்னெடுக்க வேண்டும் என்றும், கடன் சுமையைத் தொடர்ந்து அதிகரிப்பதால் மட்டும் பயன் ஏற்படாது என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு