Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 13 அக்டோபர் 2026 | 27 புரட்டாசி பராபவ வருடம்

கோயம்பேட்டில் நாளை முதல் ஆயுதபூஜை சிறப்பு சந்தை

கோயம்பேட்டில் நாளை முதல் ஆயுதபூஜை சிறப்பு சந்தை

ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு சந்தையில் நாளை முதல் சிறப்பு சந்தை தொடங்குகிறது. அக்டோபர் 23-ந்தேதி வரை நடைபெறவுள்ள இந்தச் சந்தையில், பூஜைக்குத் தேவையான அவல், பொரி, வாழைக்கன்று, தோரணம், பூசணிக்காய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. தமிழகத்தில் வரும் 19-ந்தேதி ஆயுதபூஜை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றைச் சுத்தம் செய்து வழிபடுவது வழக்கம். அதேபோல், கல்விக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் தொழில் சார்ந்த கருவிகளை வைத்தும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

Advertisement
இதற்காக அவல், பொரி, பழங்கள், பூக்கள், வாழைக்கன்று, தோரணம், பூசணிக்காய் உள்ளிட்ட பூஜைப் பொருட்களை பொதுமக்கள் வாங்கிச் செல்வார்கள். பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, நாளை முதல் அக்டோபர் 23-ந்தேதி வரை சிறப்பு சந்தை செயல்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சந்தை மூலம் ஆயுதபூஜைக்குத் தேவையான பொருட்களை ஒரே இடத்தில் வாங்கிச் செல்ல பொதுமக்களுக்கு வசதி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு