மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதல்-அமைச்சர் விஜய்
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை அமைக்க கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிக்கு தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே நீண்டகாலமாக கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது.
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் பெய்யாததால், கே.ஆர்.எஸ். அணை உள்ளிட்ட காவிரி நீர்ப்பாசன அமைப்புகளில் போதிய நீர் சேமிப்பு ஏற்படவில்லை. இதன் காரணமாக, குடிநீர் தேவைக்காக மட்டுமே நீரை பயன்படுத்த மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. அணைகளுக்கு போதுமான நீர்வரத்து இல்லாததால், தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்து விடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதற்கிடையில், டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், பாசன பயன்பாட்டிற்காக தமிழ்நாட்டுக்கு தற்போது தண்ணீர் திறக்க இயலாது என்று கர்நாடக அரசு தெரிவித்ததாக கூறப்படுகிறது.இந்த சூழலில், காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை தொடர்பான நீண்டகால பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க, கர்நாடக அரசின் நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள், தமிழக நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அழைப்பு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அந்த அழைப்பில், வருகிற 3-ம் தேதி பெங்களூருவில் கர்நாடக மற்றும் தமிழக முதல்-அமைச்சர்கள் சந்தித்து, காவிரி நீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை தமிழக அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ பதில் எதுவும் வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பான ஆலோசனையில் பங்கேற்க முதல்-அமைச்சர் விஜய் வருகிற 3ம்தேதிகர்நாடகாசெல்லஉள்ளதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து வேளாண்துறை அமைச்சர் வினோத் கூறுகையில், கர்நாடகாவில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்பார் என்றும், தமிழகத்துக்குரிய காவிரி நீரை திறந்து விட வேண்டும் என்பதைக் கூட்டத்தில் வலியுறுத்துவோம் என்றும் தெரிவித்தார்.
மேலும், மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு எந்த நிலையிலும் தமிழ்நாடு அனுமதி அளிக்காது; அது மாநிலத்தின் உரிமை சார்ந்த நிலைப்பாடு என்றும் அவர் கூறினார்.