Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 16 அக்டோபர் 2026 | 30 புரட்டாசி பராபவ வருடம்

மாயமான 7 வயது சிறுமி: 5-வது நாளாக தீவிர தேடுதல் – 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

மாயமான 7 வயது சிறுமி: 5-வது நாளாக தீவிர தேடுதல் – 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே காணாமல் போன 7 வயது சிறுமியைத் தேடும் பணி 5-வது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறுமியைக் கண்டுபிடிக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் களமிறங்கியுள்ள நிலையில், மலைக்குன்றுகள் உள்ளிட்ட பகுதிகளில் 50 டிரோன்கள் மூலம் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிறந்த நாளைக் கொண்டாடிய சிறுமி மாயம் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்தவர் வடிவேலு. இவரது மனைவி பவானி. இந்த தம்பதியரின் இரண்டாவது மகள் ஹேமாவதி (7). கடந்த 11-ம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடிய ஹேமாவதி, அன்று இரவு பெற்றோருடன் வீட்டில் படுத்துத் தூங்கியுள்ளார். மறுநாள் அதிகாலை 5 மணியளவில் எழுந்த பெற்றோர், ஹேமாவதியைக் காணாமல் அதிர்ச்சியடைந்தனர். அக்கம் பக்கத்திலும் பல்வேறு இடங்களிலும் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. 8 தனிப்படைகள் அமைத்து விசாரணை இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஹேமாவதியைக் கண்டுபிடிப்பதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவு போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்துவதுடன், சிறுமியைத் தேடி பல்வேறு இடங்களிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வரும் நிலையில், 5-வது நாளாகவும் சிறுமி கிடைக்காததால் போலீசார் தேடுதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர். 100-க்கும் மேற்பட்ட போலீசார் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். டிரோன்கள் மூலம் மலைப்பகுதிகளில் தேடுதல் தேடுதல் பணியின் ஒரு பகுதியாக, கிராமத்தில் உள்ள வீடுகளுக்குச் நேரில் செல்லும் போலீசார், அங்குள்ளவர்களின் விவரங்களைச் சேகரித்து வருகின்றனர். மேலும், வீடுகளின் அனைத்து பகுதிகளையும் முழுமையாக ஆய்வு செய்து வருகின்றனர். சிறுமியின் வீட்டைச் சுற்றியுள்ள விவசாய நிலங்கள், முட்புதர்கள், ஏரிகள், குளங்கள், குட்டைகள், விவசாயக் கிணறுகள் ஆகிய இடங்களிலும் தேடுதல் நடைபெறுகிறது. அதேபோல், மலைக்குன்றுகளில் உள்ள குகைகள் மற்றும் பாறைகளின் இடுக்குகளிலும் சிறுமி இருக்கிறாரா என ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக 50 டிரோன்கள் பயன்படுத்தப்பட்டு, பல்வேறு பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிறுமியைக் கண்டுபிடிக்கும் நோக்கில் போலீசார் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,515
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு