மராட்டியம்: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3,000 கேஸ் சிலிண்டர்கள்... அதிர்ச்சி காட்சிகள்...
மராட்டிய மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், எச்பிசிஎல் (HPCL) எரிவாயு நிரப்பும் நிலையத்தில் இருந்த சுமார் 3,000 எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன. பாதுகாப்புச் சுவர் சேதமடைந்ததால், சிலிண்டர்கள் அருகிலுள்ள பாதாள்கங்கா ஆற்றில் கலந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தில் மிதந்து செல்லும் சிலிண்டர்களின் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஆற்றங்கரையில் அல்லது வெள்ளநீரில் சிலிண்டர்கள் தென்பட்டால் அவற்றை தொடவோ, எடுத்துச் செல்லவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிலிண்டர்களை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறைகள் மேற்கொண்டு வருகின்றன.