Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 06 நவம்பர் 2026 | 20 ஐப்பசி பராபவ வருடம்

பழனி சப்-கலெக்டராக பிரியங்கா நியமனம்

பழனி சப்-கலெக்டராக பிரியங்கா நியமனம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி வருவாய் கோட்டத்தின் புதிய சப்-கலெக்டராக பிரியங்கா நியமிக்கப்பட்டுள்ளார். பழனி வருவாய் கோட்டத்தின் கீழ் பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், குஜிலியம்பாறை என நான்கு தாலுகாக்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் மாவட்ட நிர்வாகத்தில் பழனி சப்-கலெக்டர் பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்பு இப்பதவியில் இருந்த கண்ணன், சில மாதங்களுக்கு முன்பு மருத்துவ விடுப்பில் சென்றார். இதையடுத்து சப்-கலெக்டர் பணியிடம் காலியாகவே இருந்து வந்தது. இதனால் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்க வந்த பொதுமக்கள், உரிய அதிகாரி இல்லாததால் மனுக்களை சமர்ப்பிக்க முடியாமல் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

Advertisement
எனவே, காலியாக உள்ள சப்-கலெக்டர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பயிற்சி துணை கலெக்டராகப் பணியாற்றி வந்த பிரியங்காவுக்கு பழனி சப்-கலெக்டர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று அவர் பழனி சப்-கலெக்டர் அலுவலகத்தில் தனது பணியைப் பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய சப்-கலெக்டராகப் பொறுப்பேற்ற பிரியங்காவை பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் தாசில்தார்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு