பழனி சப்-கலெக்டராக பிரியங்கா நியமனம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
06 Nov 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 06 Nov 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பழனி சப்-கலெக்டராக பிரியங்கா நியமனம்

பழனி சப்-கலெக்டராக பிரியங்கா நியமனம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி வருவாய் கோட்டத்தின் புதிய சப்-கலெக்டராக பிரியங்கா நியமிக்கப்பட்டுள்ளார். பழனி வருவாய் கோட்டத்தின் கீழ் பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், குஜிலியம்பாறை என நான்கு தாலுகாக்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் மாவட்ட நிர்வாகத்தில் பழனி சப்-கலெக்டர் பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்பு இப்பதவியில் இருந்த கண்ணன், சில மாதங்களுக்கு முன்பு மருத்துவ விடுப்பில் சென்றார். இதையடுத்து சப்-கலெக்டர் பணியிடம் காலியாகவே இருந்து வந்தது. இதனால் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்க வந்த பொதுமக்கள், உரிய அதிகாரி இல்லாததால் மனுக்களை சமர்ப்பிக்க முடியாமல் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது. எனவே, காலியாக உள்ள சப்-கலெக்டர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பயிற்சி துணை கலெக்டராகப் பணியாற்றி வந்த பிரியங்காவுக்கு பழனி சப்-கலெக்டர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று அவர் பழனி சப்-கலெக்டர் அலுவலகத்தில் தனது பணியைப் பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய சப்-கலெக்டராகப் பொறுப்பேற்ற பிரியங்காவை பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் தாசில்தார்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.