Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 16 செப்டம்பர் 2026 | 31 ஆவணி பராபவ வருடம்

பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு விரிவாக்க திட்டம்: செப்டம்பர் 22-ல் தொடங்கி வைக்கும் முதல்-அமைச்சர்

பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு விரிவாக்க திட்டம்: செப்டம்பர் 22-ல் தொடங்கி வைக்கும் முதல்-அமைச்சர்

த.வெ.க. தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, மாநிலத்தில் செயல்பட்டு வந்த முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என்ற புதிய பெயர் வழங்கப்பட்டது. இந்த திட்டம் தற்போது அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த விரிவாக்கத் திட்டம் தொடங்கப்படும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது முதல்-அமைச்சர் விஜய் திட்டத்தை தொடங்கி வைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல்-அமைச்சர் விஜய் லண்டன் பயணம் மேற்கொண்டதால், திட்ட தொடக்க விழா பின்னர் நடைபெறுமென ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement
இந்த நிலையில், வருகிற செப்டம்பர் 22-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை முதல்அமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக நலத்துறை செயலாளர் பல்லவி பல்தேவ், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், இடைத்தேர்தல் நடைபெறும் செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களைத் தவிர, மாநிலத்தின் பிற அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் ஒரே நேரத்தில் அமல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு