Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
செவ்வாய் | 01 செப்டம்பர் 2026 | 16 ஆவணி பராபவ வருடம்

பயணிகள் கவனத்திற்கு.. 14 சிறப்பு ரெயில்களின் சேவை மேலும் நீட்டிப்பு!

பயணிகள் கவனத்திற்கு.. 14 சிறப்பு ரெயில்களின் சேவை மேலும் நீட்டிப்பு!

பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் 14 சிறப்பு ரெயில்களின் சேவை காலத்தை மேலும் நீட்டித்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதன்படி, தாம்பரம்–போடிநாயக்கனூர் இடையே சனிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06059), செப்டம்பர் 12 முதல் அக்டோபர் 24 வரை கூடுதலாக 7 சேவைகள் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் போடிநாயக்கனூர்–தாம்பரம் இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் ரெயில் (06060), செப்டம்பர் 13 முதல் அக்டோபர் 25 வரை 7 சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.சென்னை எழும்பூர்–கன்னியாகுமரி இடையே வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06045), செப்டம்பர் 4 முதல் 25 வரை 4 சேவைகளும், கன்னியாகுமரி–சென்னை எழும்பூர் இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06046), செப்டம்பர் 6 முதல் 27 வரை 4 சேவைகளும் இயக்கப்பட உள்ளன.மங்களூரு சென்டிரல்–சென்னை எழும்பூர் இடையே திங்கட்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06126), செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 26 வரை 8 சேவைகளும், சென்னை எழும்பூர்–மங்களூரு சென்டிரல் இடையே செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06125), செப்டம்பர் 8 முதல் அக்டோபர் 27 வரை 8 சேவைகளும் நீட்டிக்கப்பட்டுள்ளன.போத்தனூர்–சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் இடையே வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06028), செப்டம்பர் 4 முதல் நவம்பர் 29 வரை 39 சேவைகள் இயக்கப்படும்.

Advertisement
அதேபோல், சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்–போத்தனூர் இடையேயான சிறப்பு ரெயில் (06027) சேவையும் செப்டம்பர் 4 முதல் நவம்பர் 29 வரை 39 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.திருநெல்வேலி–மேட்டுப்பாளையம் இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06030), செப்டம்பர் 6 முதல் நவம்பர் 29 வரை 13 சேவைகளும், மேட்டுப்பாளையம்–திருநெல்வேலி இடையே திங்கட்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06029), செப்டம்பர் 7 முதல் நவம்பர் 30 வரை 13 சேவைகளும் இயக்கப்பட உள்ளன.நெல்லை–தாம்பரம் இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06166), செப்டம்பர் 6 முதல் 27 வரை 4 சேவைகளும், தாம்பரம்–திருநெல்வேலி இடையே திங்கட்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06165), செப்டம்பர் 7 முதல் 28 வரை 4 சேவைகளும் நீட்டிக்கப்பட்டுள்ளன.மேலும், திருநெல்வேலி–தாம்பரம் இடையே வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06070), செப்டம்பர் 3 முதல் அக்டோபர் 29 வரை 9 சேவைகளும், தாம்பரம்–திருநெல்வேலி இடையே வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06069), செப்டம்பர் 4 முதல் அக்டோபர் 30 வரை 9 சேவைகளும் தொடர்ந்து இயக்கப்படும்.இந்த 14 சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு