Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 02 அக்டோபர் 2026 | 16 புரட்டாசி பராபவ வருடம்

பத்மநாபபுரம் அரண்மனையில் கோலாகலமாக தொடங்கிய ஓணம் திருவிழா

பத்மநாபபுரம் அரண்மனையில் கோலாகலமாக தொடங்கிய ஓணம் திருவிழா

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பத்மநாபபுரம் அரண்மனையில் இந்த ஆண்டுக்கான ஓணம் திருவிழா இன்று தொடங்கியது. அத்தப்பூ கோலம், ஓண விருந்து உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் அடுத்த 10 நாட்களுக்கு நடைபெற உள்ளன.கேரள மக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான ஓணம், கேரளத்தில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வாழும் மலையாள மொழி பேசும் மக்களால் சாதி, மத வேறுபாடுகளைத் தாண்டி உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. கேரள அரசும் இந்தப் பண்டிகையை அரசு விழாவாகக் கொண்டாடி வருகிறது. இதையொட்டி அரசு அலுவலகங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.கேரளத்தின் பாரம்பரியத்தைப் பின்பற்றி, தமிழகத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையிலும் ஆண்டுதோறும் 10 நாட்கள் ஓணம் விழா நடத்தப்படுகிறது. கேரள அரசின் தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ள இந்த அரண்மனையில், இந்த ஆண்டுக்கான விழா காலை நடைபெற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது.அரண்மனை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், அரண்மனை அதிகாரி சது குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.இதையடுத்து, கேரள பாரம்பரிய உடையில் வந்திருந்த பெண் ஊழியர்கள் பல்வேறு வண்ண மலர்களைக் கொண்டு அத்தப்பூ கோலங்களை அமைத்தனர்.

Advertisement
பின்னர், விழாவிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்து மகிழ்ச்சியுடன் நேரத்தை கழித்தனர். மேலும், ஊழியர்களுக்காக விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.வருகிற 26-ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வடிவங்களில் அத்தப்பூ கோலங்கள் அமைக்கப்பட உள்ளன. அதேபோல், ஓண விருந்து மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. விழாவையொட்டி, அரண்மனை வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,640
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு