நேபாள பெருவெள்ளம்: இன்னும் சில மணி நேரங்களில் பீகாரை தாக்கும்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
நேபாளத்தில் கோஷி ஆற்றில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு இன்னும் சில மணி நேரங்களில் பீகாரை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதால், அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.மேகவெடிப்பு காரணமாக நேபாளத்தின் திபெத் எல்லைப் பகுதிகளில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளநீர் கிராமங்களுக்குள் புகுந்ததில் ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவையும் பலத்த சேதமடைந்துள்ளன. வெள்ளத்தில் பலர் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.தொடர்ந்து மீட்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சியாப்ரு, திமுரே பகுதிகளில் மீட்பு ஹெலிகாப்டர்களை தரையிறக்க முடியாததால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும், ஆற்றங்கரையோரம் வசிப்பவர்கள் மிகுந்தஎச்சரிக்கையுடன்இருக்கவேண்டும்என்றும்பிரதமர்பாலேந்திரஷாஅறிவுறுத்தியுள்ளார்.நேபாளத்தைத் தொடர்ந்து திபெத்தின் கியிரோங் பகுதியிலும் வெள்ளத்தால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், பலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த வெள்ளத்துக்குப் பிறகு 105 இந்தியர்கள் உள்பட மொத்தம் 384 வெளிநாட்டினர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 17 பேர் மலேசியாவைச் சேர்ந்தவர்கள், 12 பேர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள், 4 பேர் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள். ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்தைச் சேர்ந்த தலா ஒருவரும், அமெரிக்காவைச் சேர்ந்த 3 பேரும் காணாமல் போயுள்ளனர். மீதமுள்ளவர்களின் நாட்டைச் சேர்ந்தவர்கள் குறித்த விவரங்கள் தெரியவில்லை.கைலாஷ் யாத்திரைக்காக சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 57 பேர் இந்த பெருவெள்ளத்தில் சிக்கியுள்ளனர். அவர்களில் ஒரு பேருந்தில் பயணம் செய்த 22 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும், திடீர் வெள்ளத்தில் 32 போலீசார் மற்றும் ஆயுதப்படையைச் சேர்ந்த 8 பேர் என மொத்தம் 40 பேர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதற்கிடையே, கோஷி ஆற்றின் வெள்ளம் விரைவில் பீகாரை தாக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்கவும், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.