நீட் தேர்வை ரத்து செய்வதே நிரந்தர தீர்வு: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், டெல்லியில் மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.நீட் தேர்வின் அமைப்பே பெரிய அளவிலான முறைகேடுகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இருப்பதாக திமுக ஆரம்பத்திலேயே எச்சரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதனால், தொடக்கத்திலிருந்தே நீட் தேர்வை எதிர்த்து அதன் பாதிப்புகளை திமுக தொடர்ந்து எடுத்துரைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.சமூக நீதியை முன்னிறுத்தி, இந்தியாவின் முதல் அரசியலமைப்பு சட்டத் திருத்தத்திற்கு வழிகாட்டிய தமிழ்நாட்டின் நிலைப்பாடு ஒன்றே ஒன்றாகும்; அது நீட் தேர்வை ரத்து செய்வதே என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.தற்போது நடைபெறும் போராட்டங்களில் வேறு எந்த கோரிக்கையை விடவும் நீட் தேர்வை ஒழிப்பதே முக்கிய கோரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், நீட் தேர்வை ரத்து செய்வதே தற்போதைய அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தரமான தீர்வாக அமையும் என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.மேலும், நீட்_தேர்வை_தடை_செய்யுங்கள்மற்றும் மாணவர்களை_காப்பாற்றுங்கள் என்ற ஹேஷ்டேக்குகளையும் அவர் பதிவில் இணைத்துள்ளார்.