Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 12 செப்டம்பர் 2026 | 27 ஆவணி பராபவ வருடம்

நீட் - சிபிஎஸ்இ தேர்வு சர்ச்சை: டெல்லியில் மாணவர்கள் முற்றுகை போராட்டம்; 70 பேரை கைது செய்த போலீஸ்!

நீட் - சிபிஎஸ்இ தேர்வு சர்ச்சை: டெல்லியில் மாணவர்கள் முற்றுகை போராட்டம்; 70 பேரை கைது செய்த போலீஸ்!

நீட் மற்றும் சிபிஎஸ்இ தேர்வுகளில் ஏற்பட்டதாக கூறப்படும் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தலைநகரின் பல பகுதிகளில் பதற்றமான நிலை உருவானது.

போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்திய டெல்லி போலீசார் நடவடிக்கையில் இறங்கினர். வன்முறை சம்பவங்களுக்கு காரணமாக இருந்ததாக கூறி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 70 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement

இதற்கிடையில், நிலைமையை சமாளிப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அவர் விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்யலாம் என்ற தகவலும் பரவி வருகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
PRGI NO : TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு