நாடாளுமன்ற வளாகத்தில் ஆளும் கூட்டணி - எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒரே நேரத்தில் போராட்டம்
நீட் தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் அவை நடவடிக்கைகள் கடும் எதிர்ப்புகளால் பாதிக்கப்பட்டன.இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பதிவில், வினாத்தாள் கசிவு தொடர்பான குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என்றும், இந்த வழக்குகளில் விரைவு நீதிமன்றங்கள் மூலம் நீதி கிடைப்பதை அரசு உறுதி செய்யும் என்றும் தெரிவித்தார்.
இருப்பினும், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள்தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத் தொடக்கத்திற்கு முன்பாக தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) எம்பிக்களும் வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒரே நேரத்தில், எதிரெதிராக போராட்டம் நடத்தியது நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனுடன், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திமுக எம்பிக்கள் தனியாக போராட்டம் நடத்தினர். காங்கிரஸுடன் கூட்டணியை முடித்துக்கொண்டுள்ள திமுக, நாடாளுமன்ற வளாகம் அருகே தனித்துப் போராட்டத்தில் ஈடுபட்டது.