Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

நிலவின் மீது மோத உள்ள பால்கன்-9 ராக்கெட்: அச்சப்பட தேவையில்லை

நிலவின் மீது மோத உள்ள பால்கன்-9 ராக்கெட்: அச்சப்பட தேவையில்லை
அமெரிக்காவின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட், கடந்த ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இரண்டு லேண்டர்களை ஏற்றிச் சென்று நிலவை நோக்கி ஏவப்பட்டது. இந்த இரண்டு லேண்டர்களும் நிலவை வெற்றிகரமாக அடைந்தன. அவற்றில் ஒன்று நிலவின் மேற்பரப்பில் மோதிய நிலையில், 'புளூ கோஸ்ட்' லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கி, இரண்டு வாரங்கள் செயல்பட்டு நிலவில் சூரியன் மறையும் காட்சியையும் பதிவு செய்து அனுப்பியது. பின்னர், சூரிய ஒளி மறைந்ததால் அதன் மின்சக்தி குறைந்து செயல்பாட்டை இழந்தது.லேண்டர்களை பிரித்துவிட்ட பால்கன்-9 ராக்கெட்டின் மேல் பகுதி வழக்கமாக பூமிக்குத் திரும்ப வேண்டியிருந்தது. ஆனால், அது உயரமான சுற்றுப்பாதையில் சிக்கிக்கொண்டதால் மீண்டும் பூமியை அடையவில்லை. இதையடுத்து அந்த ராக்கெட் பகுதியின் நிலையை விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்தனர்.மொத்தம் 1,053 முறை அதன் இயக்கம் கண்காணிக்கப்பட்டபோது, அது பலமுறை பூமி மற்றும் நிலவின் சுற்றுப்பாதைகளை கடந்து சென்றாலும், எந்த விண்பொருளுடனும் மோதும் அளவுக்கு நெருங்கவில்லை என்பது தெரியவந்தது.தற்போது, எரிபொருள் முழுமையாக தீர்ந்ததால் கட்டுப்பாட்டை இழந்த அந்த ராக்கெட்டின் மேல் பகுதி நிலவை நோக்கி நகர்ந்து வருகிறது.
Advertisement
இதன் பயணப் பாதை மற்றும் எதிர்கால நிலை குறித்து சுற்றுப்பாதை ஆய்வாளர்கள் மேற்கொண்ட கணிப்பின்படி, வருகிற 5-ஆம் தேதி மதியம் 1.14 மணியளவில் நிலவில் உள்ள ஐன்ஸ்டீன் பள்ளம் அருகே அது மோதக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த நேரத்தில் ராக்கெட் பகுதி மணிக்கு சுமார் 8,700 கிலோமீட்டர் வேகத்தில், அதாவது ஒலியின் வேகத்தை விட ஏழு மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இருப்பினும், இந்த நிகழ்வால் பூமியில் உள்ள பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர்கள் விளக்கியுள்ளனர்.மேலும், இதுபோன்ற பயன்பாடு முடிந்த விண்வெளி பொருட்கள் விண்வெளியில் குப்பையாக தேங்காமல் பாதுகாப்பாக அகற்றப்பட வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் மீண்டும் உணர்த்துவதாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பிடத்தக்க வகையில், அந்த ராக்கெட்டின் மேல் பகுதி இதுவரை 26 நாட்களுக்கு ஒருமுறை பூமியைச் சுற்றி வந்துள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு