Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 12 செப்டம்பர் 2026 | 27 ஆவணி பராபவ வருடம்

தொடரும் காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சரை விமர்சித்த மு.க.ஸ்டாலின்

தொடரும் காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சரை விமர்சித்த மு.க.ஸ்டாலின்

முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் காவல் மரணங்கள் குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.அந்தப் பதிவில், "தொடர்ச்சியாக காவல் மரணங்கள் நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் எப்போது இதுகுறித்து பேசுவார்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, “Sorry சொன்னால் போதுமா?” என்று தன்னிடம் கேள்வி எழுப்பியவர், தற்போது முதலமைச்சராக இருந்தும் மன்னிப்பு கேட்கவோ, விளக்கம் அளிக்கவோ முன்வரவில்லை என்று அவர் விமர்சித்துள்ளார்.மேலும், "பொறுப்பேற்பு (Accountability), மன்னிப்பு (Apology) ஆகிய சொற்கள் முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் உள்ளனவா?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.காவல் மரணங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிக்கக்கூட மனமின்றி செயல்படும் தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) அரசுக்கு தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
PRGI NO : TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு