தேயிலை ஏலத்தில் புதிய உச்சம்... தென் மாநிலங்களில் ரூ.52.96 கோடி வருவாய்
தென் மாநிலங்களில் நடைபெற்ற 29வது வாராந்திர தேயிலை ஏலத்தில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது விற்பனையும் வருவாயும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளன.
குன்னூர், டீசர்வ், கோவை மற்றும் கொச்சி ஆகிய நான்கு தேயிலை ஏல மையங்களில் வாரம் தோறும் இரண்டு நாட்கள் ஏலம் நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டின் 29வது வார ஏலத்தில் மொத்தமாக 47.02 லட்சம் கிலோ தேயிலை ஏலத்திற்கு வந்தது. இதில் 41.69 லட்சம் கிலோ தேயிலை விற்பனையாகி, ரூ.52.96 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு 43.65 லட்சம் கிலோ தேயிலை ஏலத்திற்கு வந்த நிலையில், 32.95 லட்சம் கிலோ மட்டுமே விற்பனையாகி ரூ.36.31 கோடி வருவாய் கிடைத்திருந்தது.
அதனுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மொத்த வருவாய் ரூ.16.65 கோடி அதிகரித்துள்ளது.இந்த வளர்ச்சிக்கு குன்னூர் ஏல மையத்தில் பதிவான அதிக விற்பனை மற்றும் உயர்ந்த சராசரி விலை முக்கிய காரணமாக இருந்தது. அதேபோல், கொச்சி மற்றும் கோவை ஏல மையங்களிலும் விற்பனை அளவு உயர்வைக் கண்டது. ஆனால், டீசர்வ் ஏல மையத்தில் மட்டும் கடந்த ஆண்டை விட விற்பனை வருவாயில் சிறிய அளவிலான சரிவு பதிவானது.