Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
புதன் | 09 செப்டம்பர் 2026 | 24 ஆவணி பராபவ வருடம்

தூத்துக்குடி விசைப்படகுடன் 9 மீனவர்கள் சிறைபிடிப்பு: லட்சத்தீவு அருகே பரபரப்பு

தூத்துக்குடி விசைப்படகுடன் 9 மீனவர்கள் சிறைபிடிப்பு: லட்சத்தீவு அருகே பரபரப்பு

லட்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த விசைப்படகு ஒன்றை கவராத்தி கடற்படையினர் கைப்பற்றியதுடன், அதில் இருந்த 9 மீனவர்களையும் விசாரணைக்காக சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தைச் சேர்ந்த நட்டார் என்ற மிக்கேல்ராஜுக்கு சொந்தமான செவுள் வலை விசைப்படகில் 9 மீனவர்கள் கடந்த செப்டம்பர் 4-ம் தேதி கேரள மாநிலம் கொச்சின் துறைமுகத்தில் இருந்து லட்சத்தீவுகள் நோக்கி மீன்பிடிக்க புறப்பட்டனர். இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் கவராத்தி தீவு அருகே விசைப்படகு சென்று கொண்டிருந்தபோது, பாதுகாப்பு காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்ட கடல் பகுதிக்குள் நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது.

Advertisement
இதையடுத்து கவராத்தி கடற்படையினர் விசைப்படகை கைப்பற்றினர். படகு உரிமையாளர் மிக்கேல்ராஜ் உள்ளிட்ட 9 மீனவர்களும் கவராத்தி தீவில் கடற்படையினரின் விசாரணைக்காக விசைப்படகிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த கடலோர மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு