Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 05 நவம்பர் 2026 | 19 ஐப்பசி பராபவ வருடம்

தீபாவளி பண்டிகை: மதுரை மாநகரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

தீபாவளி பண்டிகை: மதுரை மாநகரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாநகரில் பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்கும் வகையில் இன்று முதல் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. வரும் 8-ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ளதால், நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இன்று முதல் 8-ம் தேதி வரை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சரக்கு மற்றும் கனரக வாகனங்களுக்குத் தடை இதன்படி, பகல் நேரங்களில் மதுரை நகரின் மஹால் ரோடு, கீழமாரட் வீதி, நான்கு மாசி வீதிகள் மற்றும் நான்கு ஆவணி மூல வீதிகளில் இலகுரக சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து சரக்கு வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பைபாஸ் சாலை, காமராஜர் சாலை, அண்ணாநகர் 80 அடி சாலை, கே.கே. நகர் 80 அடி சாலை, அழகர்கோவில் சாலையில் உள்ள மூன்றுமாவடி சந்திப்பு, புதுநத்தம் சாலை அய்யர்பங்களா சந்திப்பு, திண்டுக்கல் சாலை கூடல்நகர் சந்திப்பு, அவனியாபுரம் பெரியார் சிலை சந்திப்பு, சிவகங்கை சாலை ரிங்ரோடு சந்திப்பு, மீனாட்சி மருத்துவமனை சந்திப்பு ஆகிய வழித்தடங்களில் இருந்து லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் நகருக்குள் நுழைய அனுமதி கிடையாது. பயணிகள் வாகனங்களுக்கு இந்தத் தடை பொருந்தாது. இந்தச் சந்திப்புகள் வழியாக வணிக வாகனங்கள் இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மட்டுமே நகருக்குள் அனுமதிக்கப்படும். அதேநேரத்தில், 6 மற்றும் 7-ம் தேதிகளில் பகல், இரவு என 24 மணி நேரமும் லாரிகள், கனரக வாகனங்கள், இலகுரக சரக்கு வாகனங்கள் நகருக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. முக்கிய வீதிகளில் வாகனக் கட்டுப்பாடு பொதுமக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு 6 மற்றும் 7-ம் தேதிகளில் நேதாஜி சாலை, மேலமாசி வீதி, தெற்குமாசி வீதி, கீழமாசி வீதி, மேல ஆவணி மூல வீதி, கீழ ஆவணி மூல வீதி, தெற்கு ஆவணி மூல வீதி ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. பேலஸ் ரோடு மற்றும் கீழமாரட் வீதிகளில் வாகனங்கள் செல்ல மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாதசாரிகள் அதிகம் பயன்படுத்தும் தெற்கு மாசி வீதி, நேதாஜி ரோடு, மேல கோபுரத் தெரு, கீழமாரட் வீதி, கீழ ஆவணி மூல வீதி, தெற்கு ஆவணி மூல வீதி உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் 8-ம் தேதி வரை நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வரும் வாகனங்களை பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள அடுக்குமாடி கட்டண வாகன நிறுத்தம் அல்லது வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள அடுக்குமாடி வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும். பொதுமக்களுக்கான வாகன நிறுத்துமிடங்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து மதுரை நகருக்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement
- விரகனூர் மற்றும் காமராஜர் சாலை வழியாக வருபவர்கள் சவுராஷ்ட்ரா மேல்நிலைப் பள்ளியில் வாகனங்களை நிறுத்தலாம். - கீழவெளி வீதி, தெற்குமாரட் வீதி, தெற்கு வெளி வீதி வழியாக வருபவர்கள் சிந்தாமணி சாலையில் உள்ள தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி மைதானத்தைப் பயன்படுத்தலாம். - பைபாஸ் சாலை, கென்னட் சாலை, எல்லீஸ் நகர் பகுதிகளில் இருந்து வருபவர்கள் 70 அடி சாலையில் உள்ள எல்லீஸ் நகர் வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும். - திருப்பரங்குன்றம் பகுதியில் இருந்து வருபவர்கள் மதுரைக் கல்லூரி மைதானத்தில் வாகனங்களை நிறுத்தலாம். - காளவாசல் மற்றும் மேலவெளி வீதி பகுதிகளில் இருந்து வருபவர்கள் ரயில்வே வாகனக் காப்பகம் அல்லது சேதுபதி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நிறுத்தலாம். - நத்தம் சாலை, அழகர்கோவில் சாலை வழியாக கோகலே சாலையில் உள்ள வணிக வளாகங்களுக்கு வருபவர்கள் புதுநத்தம் சாலையில் உள்ள பள்ளி மைதானத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும். இருசக்கர வாகனங்களை நிறுத்த ஏற்பாடு பொதுமக்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கும் குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கீழமாசி வீதி லெமன் மார்க்கெட் சந்திப்பு முதல் தேரடி சந்திப்பு வரை, தெற்குமாசி வீதியில் மஞ்சனக்காரத் தெரு சந்திப்பு முதல் மறவர் சாவடி வரை, அங்கிருந்து டி.எம். கோர்ட் சந்திப்பு வரையிலும் வாகனங்களை நிறுத்தலாம். மேலும், டி.எம். கோர்ட் சந்திப்பு முதல் முருகன் கோவில் சந்திப்பு வரையிலும், அங்கிருந்து வடக்குமாசி வீதி - மேலமாசி வீதி சந்திப்பு வழியாக தளவாய் தெரு சந்திப்பு வரையிலும் இருசக்கர வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர வடக்கு வெளி வீதி, மேலவெளி, டி.பி.கே. ரோடு, கிரைம் பிராஞ்ச், தெற்கு வெளி வீதி, தெற்குவாசல் ஆகிய பகுதிகளிலும் வாகனங்களை நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கியூ.ஆர். குறியீடு மற்றும் சிறப்புப் பேருந்து வசதி வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் கியூ.ஆர். குறியீடும் (QR Code) தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், வாகன நிறுத்துமிடங்களை இணைக்கும் வகையில் நகரப் பேருந்துகள் அடிக்கடி வெளி வீதிகள் வழியாகச் சுற்றி வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் போக்குவரத்து மாற்றங்களையும், வாகன நிறுத்துமிடங்களையும் பொதுமக்கள் பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு