திருமாவளவனுக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு முதல்-அமைச்சர் விஜய், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தும் தனது நண்பரான திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 28-வது வயதில் அரசியல் கட்சியைத் தொடங்கி, கடந்த 36 ஆண்டுகளாக தனது இயக்கத்தை உறுதியுடன் வழிநடத்தி வருபவர் திருமாவளவன் என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும், தனது கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்களில் எந்தவித சமரசமும் செய்யாமல், கட்சியின் ஒற்றுமையைப் பேணியதோடு, ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு பெறுவதற்காக தொடர்ந்து போராடி அதை வெற்றிகரமாக சாதித்தவர் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.65-வது வயதில் அடியெடுத்து வைக்கும் திருமாவளவன், மேலும் பல சாதனைகளைப் படைத்து, நல்ல உடல்நலத்துடன் தொடர்ந்து மக்கள் பணியாற்ற இறைவன் அருள்புரிய வேண்டும் என்று ரஜினிகாந்த் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.