திமுகவில் வயதானவர்களுக்கும் வாய்ப்பு உண்டு: துரைமுருகன்
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:
கேள்வி: திமுக செயற்குழுக் கூட்டத்தில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உங்கள் கருத்து?
துரைமுருகன்: திமுகவில் இளைஞர்களுக்கும் வாய்ப்பு உள்ளது; வயதானவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது.கேள்வி: தவெக ஆட்சியின் முதல் 100 நாட்கள் குறித்து உங்கள் கருத்து என்ன?
துரைமுருகன்: எனது அரசியல் அனுபவத்தில் பார்க்கும்போது, இந்த ஆட்சி 100 நாட்களில் குறிப்பிடத்தக்க வகையில் எதையும் செய்யவில்லை. முந்தைய ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் பெயர்களை மட்டுமே மாற்றி வருகின்றனர். புதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை.தேர்தல் அறிக்கையில் அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் ரூ.2,500 வழங்குவது, ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன.அவற்றில்ஒன்றுகூட100நாட்களுக்குள்நிறைவேற்றப்படவில்லை.சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதத்தின்போதும் சம்பந்தமில்லாத விஷயங்கள் பேசப்படுகின்றன.
வழங்கப்பட்டுள்ளதை மட்டுமே படிக்கின்றனர். சம்பந்தப்பட்ட துறைகளின் கோரிக்கைகள் குறித்தோ, அந்தத் துறைகள் தொடர்பான விவகாரங்கள் குறித்தோ விவாதிப்பதில்லை.மானியக் கோரிக்கை விவாதத்தில் பொதுவாக 10 எம்எல்ஏக்கள் பேசுவதுடன், தங்களது தொகுதி மற்றும் துறை சார்ந்த குறைகளை முன்வைப்பார்கள். அவற்றை அமைச்சர்கள் பதிவு செய்து, அதிகாரிகளிடம் விளக்கம் பெற்று அதற்கான பதிலை அளிப்பதே நடைமுறை.நான் வகித்த நீர்வளத்துறை தற்போது அமைச்சர் ஆனந்திடம் உள்ளது. ஆனால் அவர் தனது துறை தொடர்பாக ஒரு வார்த்தைகூட பேசாமல், தனது தலைவரைப் பற்றியே பேசுகிறார்.
இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.