Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தாக்கல் செய்த ஜாமீன் மனு நிராகரிப்பு

திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தாக்கல் செய்த ஜாமீன் மனு நிராகரிப்பு
விளாத்திகுளம் தொகுதியைச் சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன், கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வை போலீசார் நேற்று முன்தினம் காலை கைது செய்தனர். பின்னர், மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் சுமார் 11 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர், தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி சுமதி முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.விசாரணையின் போது, அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
Advertisement
எனினும், அந்த மனுவை நீதிபதி நிராகரித்ததுடன், ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மார்க்கண்டேயன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இதற்கிடையில், மார்க்கண்டேயன் தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இன்று அதற்கான விசாரணையை நடத்தியது.விசாரணை முடிவில், தூத்துக்குடி நீதிமன்ற நீதிபதி சுமதி, விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால், அவர் தொடர்ந்து சிறையிலேயே இருப்பார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு