Skip to main content
🌤️ —°C
சனி | 29 ஆகஸ்ட் 2026 | 13 ஆவணி பராபவ வருடம்

தமிழகத்தில் சர்க்கரை விலை 19.44% சரிவு: கிலோ ரூ.58-க்கு விற்பனை

தமிழகத்தில் சர்க்கரை விலை 19.44% சரிவு: கிலோ ரூ.58-க்கு விற்பனை
தமிழகத்துக்கு உத்தரபிரதேசம் மற்றும் மராட்டிய மாநிலங்களில் இருந்து அதிக அளவில் சர்க்கரை வரத்து உள்ளது. அந்த மாநிலங்களில் முறையற்ற பருவமழையால் கரும்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்திலும் சர்க்கரை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது.கடந்த 24-ந்தேதி ஒரு கிலோ சர்க்கரை ரூ.72-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் 50 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை சர்க்கரையின் விலை ரூ.3,600 வரை சென்றது.சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் ஒரு பகுதியாக, 10 லட்சம் டன் சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. மேலும், சர்க்கரை ஆலைகளில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு, பதுக்கலை தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.ஆலைகளில் இருந்து சந்தைக்கு சர்க்கரை கொண்டு செல்லப்படுவதில் ஏற்பட்ட காலதாமதமும் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வரும் செப்டம்பர் மாதம் முதல் 2 வாரங்களுக்கு ஒருமுறை சர்க்கரை ஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Advertisement
அதன்படி, ஆலைகளுக்கு ஒதுக்கப்படும் சர்க்கரையில் குறைந்தபட்சம் 40 சதவீதத்தை முதல் வாரத்திலும், மீதமுள்ள சர்க்கரையை அடுத்த வாரத்திலும் சந்தைக்கு அனுப்ப வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளால் வெளிச்சந்தையில் சர்க்கரை கையிருப்பு படிப்படியாக சீரடைந்து வருவதுடன், விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.கடந்த 25-ந்தேதி சர்க்கரை விலை 9.7 சதவீதம் குறைந்து கிலோ ரூ.65-க்கு விற்பனையானது. இந்த நிலையில், நேற்று விலை மேலும் சரிந்து கிலோ ரூ.58-க்கு விற்பனை செய்யப்பட்டது. 50 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை சர்க்கரை ரூ.2,900-க்கு விற்பனையானது.கடந்த 24-ந்தேதி கிலோ ரூ.72-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.58-ஆக குறைந்துள்ளது. இது 19.44 சதவீத விலை சரிவாகும்.மேலும், ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ சர்க்கரை ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போதைய விலை நிலவரத்தைப் பார்க்கும்போது, சர்க்கரை விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு