தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருவதால், மாநிலத்தின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூலை 25 (இன்று): தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை 26: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மாநிலத்தின் பிற பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்காலிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 27: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற தமிழகப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்காலில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.வெப்பநிலை நிலவரம்ஜூலை 25 அன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்க வாய்ப்பு குறைவாக இருந்தாலும், சற்று அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜூலை 26 முதல் 29 வரை அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை.ஜூலை 25 அன்று வேலூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
இதேபோல், பிற தமிழகப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்காலின் ஓரிரு இடங்களிலும் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட உயரக்கூடும்.ஜூலை 26 முதல் 29 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை முன்னறிவிப்புஇன்று சென்னை நகரில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.நாளை (ஜூலை 26) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸும் பதிவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.