சென்னை வந்த 12 கிலோ கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல்; இளைஞர் கைது
பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி கடத்தி வரப்பட்ட 12 கிலோ கஞ்சா கலந்த சாக்லேட்களை போலீசார் பறிமுதல் செய்து, இந்த வழக்கில் தொடர்புடைய ஒரு இளைஞரை கைது செய்துள்ளனர்.சென்னைக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் நடவடிக்கையாக போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பெங்களூருவிலிருந்து தனியார் பார்சல் சேவை மூலம் போதை சாக்லேட்கள் அனுப்பப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, தகவலில் குறிப்பிடப்பட்டிருந்த பார்சல் அலுவலகத்தில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அங்கு வந்திருந்த பார்சல்களை ஆய்வு செய்தபோது, 12 கிலோ எடையுள்ள கஞ்சா சாக்லேட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
பின்னர் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.இந்த பார்சலை பெற்றுச் செல்ல வந்த சென்னை சௌகார்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராகுல் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.இதற்கிடையில், சென்னை சூளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனையில், தர்மேந்தர் என்பவரிடமிருந்து 726 கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் தொடர்புடைய பிற நபர்களை அடையாளம் காணும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.