தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில் மாநில அரசின் வழக்குகளை முன்னெடுத்து வாதாடும் வக்கீல்களை நியமிப்பது தொடர்பாக அரசு, அட்வகேட் ஜெனரலுடன் ஆலோசனை நடத்தியது.இந்த ஆலோசனைக்குப் பிறகு, சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றி வரும் பிரபல சட்ட நிபுணர்கள், சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகளாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வக்கீல்களாக செயல்பட்டு வருபவர்கள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த சட்ட நிபுணர்கள் உள்ளிட்ட 35 பேரின் பெயர்களை அட்வகேட் ஜெனரல் பரிந்துரைத்தார்.இந்தப் பரிந்துரையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு, அந்தப் பட்டியலுக்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கியுள்ளது.நியமிக்கப்பட்டுள்ளவர்களில் கே.கே.
Advertisement
வேணுகோபால், அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபில், முகுல் ரோத்தகி, ப. சிதம்பரம், சி.எஸ். வைத்தியநாதன், கோபால் சுப்பிரமணியன், டி.எஸ். சிவஞானம், எஸ். நாகமுத்து, பி.என். பிரகாஷ், எம். சத்யநாராயணன், கே. ராதாகிருஷ்ணன் மற்றும் ஆர். சுப்பிரமணியம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.மாநிலத்தின் நலன் தொடர்பான முக்கிய வழக்குகள் தாமதமின்றி விரைவாக விசாரணைக்கு வருவதற்கும், அவற்றை திறம்பட முன்னெடுத்து நடத்துவதற்கும் தமிழக அரசின் சார்பில் இந்த மூத்த வக்கீல்கள் ஆஜராகி வாதாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.