சிரியாவில் பிரான்ஸ் அதிபர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே குண்டு வெடிப்பு...
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே இன்று இரண்டு வெடிகுண்டுகள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த வெடிப்புகள் சுற்றுவட்டாரப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தின. பாதுகாப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்தை முற்றுகையிட்டு, மீட்பு மற்றும் விசாரணை பணிகளைத் தொடங்கினர். தொடக்கத் தகவலின்படி, இந்தச் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
வெடிப்பு நடைபெற்ற நேரத்தில் அதிபர் மக்ரோன் ஹோட்டலில் இல்லாமல் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டிருந்ததால் அவர் பாதுகாப்பாக இருப்பதாக பிரான்ஸ் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. வெடிப்புக்கான காரணம் குறித்து சிரிய பாதுகாப்பு அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.