Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

கோவில் சொத்துகள் பாதுகாப்பில் அலட்சியம் கூடாது: அதிகாரிகளுக்கு அமைச்சர் ரமேஷ் கடும் அறிவுறுத்தல்

கோவில் சொத்துகள் பாதுகாப்பில் அலட்சியம் கூடாது: அதிகாரிகளுக்கு அமைச்சர் ரமேஷ் கடும் அறிவுறுத்தல்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கோவில்களின் நிர்வாகம் மற்றும் கோவில் சொத்துகள் பாதுகாப்பு தொடர்பாக அதிகாரிகளுக்கு முக்கியமான வழிகாட்டுதல்களையும் உத்தரவுகளையும் வழங்கியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களில், கோவில்களில் நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் கொண்ட நிர்வாகம் செயல்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கோவில் சொத்துகளை அபகரிக்க மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியும் அனுமதிக்கப்படக் கூடாது என்றும்தெரிவித்துள்ளார்.கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக தகவல் கிடைத்தவுடன் உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய வேண்டும் என்றும், அந்த விவரத்தை தாமதமின்றி அமைச்சர் மற்றும் ஆணையரின் கவனத்திற்கு அதிகாரிகள் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.மேலும், கோவில்களுக்கு வரும் பக்தர்கள் எந்த சிரமமும் இன்றி சீரான முறையில் தரிசனம் செய்ய தேவையான ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும் என்றும், அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது சட்டரீதியாகவும் துறையரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் எச்சரித்துள்ளார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு