Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 13 செப்டம்பர் 2026 | 28 ஆவணி பராபவ வருடம்

கிருஷ்ணகிரி: கருவின் பாலினம் கண்டறிந்து கூறிய 2 பேர் கைது

கிருஷ்ணகிரி: கருவின் பாலினம் கண்டறிந்து கூறிய 2 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கருவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்ததாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்டத்தில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை சட்டவிரோதமாக கண்டறிந்து தெரிவிப்பவர்கள், கருக்கலைப்பு செய்பவர்கள் மற்றும் போலி மருத்துவர்களை கண்டறியும் வகையில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் நர்சு கிருத்திகா மூலம் மேற்கொண்ட சோதனையில், போச்சம்பள்ளியைச் சேர்ந்த எஸ்தர் (32) என்பவர் சட்டவிரோதமாக கருவின் பாலினத்தை கண்டறிந்து வந்தது தெரியவந்தது.

Advertisement
இதையடுத்து, ஸ்கேன் கருவியுடன் ராயக்கோட்டைக்கு வந்த எஸ்தரை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வந்தனர். பின்னர் அங்கு மறைந்திருந்து அவரை பிடித்தனர். விசாரணையில், மருத்துவம் படிக்காத எஸ்தர் கருவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்ததும், அவருக்கு உதவியாக திருப்பத்தூரைச் சேர்ந்த குருமூர்த்தி (32) என்பவரும் வந்திருந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து எஸ்தர் மற்றும் குருமூர்த்தி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு