காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு முதல்-அமைச்சர் விஜய் பாராட்டு
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ராஜா முத்துப்பாண்டியின் இந்த சிறப்பான வெற்றிக்கு மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் முதல்-அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், அவரது சாதனையை கவுரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.ராஜா முத்துப்பாண்டியின் இந்த வெற்றி, இளைஞர்களுக்கு புதிய ஊக்கத்தையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பல்வேறு சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் விஜய் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.