Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 12 செப்டம்பர் 2026 | 27 ஆவணி பராபவ வருடம்

காவிரி நீர் தராத கர்நாடகா : சட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் அவசர ஆலோசனை

காவிரி நீர் தராத கர்நாடகா : சட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் அவசர ஆலோசனை

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா தொடர்ந்து விடுவிக்காத சூழலில், அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்திற்கு கர்நாடகா வழங்க வேண்டிய காவிரி நீரின் நிலுவை அளவு தற்போது **21.9 டி.எம்.சி.** ஆக உயர்ந்துள்ளது. மேலும், கர்நாடகாவில் இருந்து தமிழக எல்லைக்குள் காவிரி நீர் வரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலை நீடித்தால், மாநிலத்தின் பல பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை உருவாகும் அபாயம் இருப்பதுடன், சம்பா பருவ நெல் சாகுபடியும் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என்ற கவலையும் எழுந்துள்ளது.

Advertisement

இதையடுத்து, தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை பெற்றுத்தர சட்ட ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் அமைச்சர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், நிர்மல்குமார், தலைமைச் செயலர் சாய்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனையின் முடிவில், கர்நாடகாவிடம் இருந்து தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை பெறும் நோக்கில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்ட வல்லுநர் குழுவிற்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
PRGI NO : TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு