Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

கருவில் குழந்தையின் பாலினத்தை வெளியிட்ட விவகாரம்: யூடியூபர் இர்பானிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு

கருவில் குழந்தையின் பாலினத்தை வெளியிட்ட விவகாரம்: யூடியூபர் இர்பானிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் இர்பான், உணவு தொடர்பான வீடியோக்கள் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமானவர். தமிழகத்தின் பல்வேறு உணவகங்களுக்கு சென்று அங்குள்ள உணவுகளை சுவைத்து, அதுகுறித்த விமர்சனங்களை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.இந்நிலையில், கடந்த 2024-ம் ஆண்டு தனது மனைவி ஆசிபா கர்ப்பமாக இருந்தபோது இர்பான் துபாய் சென்றார். அங்கு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொண்டதாக கூறப்படுகிறது. பின்னர், துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் குழந்தையின் பாலினத்தை அவர் வெளியிட்டார். தனக்கு பெண் குழந்தை பிறக்க இருப்பதாகவும் அறிவித்த அவர், அந்த நிகழ்ச்சியை தனது யூடியூப் பக்கத்திலும் பதிவேற்றம் செய்தார்.இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய சட்டப்படி கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிவதும், அதை வெளிப்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இர்பான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக இர்பான் சுகாதாரத்துறைக்கு மன்னிப்பு கடிதம் அளித்தார். அந்த கடிதத்தை ஏற்றுக்கொண்ட சுகாதாரத்துறை, அப்போது அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.
Advertisement
மேலும், இர்பான் மீதான விசாரணையும் கடந்த ஆட்சிக்காலத்தில் முடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையில், 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் இர்பானுக்கு பெண் குழந்தை பிறந்தது.இந்நிலையில், இந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை விசாரணையை முடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், சுகாதாரத்துறைக்கும் இது தொடர்பாக மனு அளிக்கப்பட்டது.இந்த வழக்கு விசாரணையின்போது, கருவில் இருந்த குழந்தையின் பாலினத்தை அறிவித்த விவகாரத்தில் 8 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இதனைத் தொடர்ந்து, யூடியூபர் இர்பானுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப மருத்துவத்துறை முடிவு செய்துள்ளது. மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரகம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டு, அவரை நேரில் அழைத்து விசாரணை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.இதனால், கருவில் குழந்தையின் பாலினத்தை அறிவித்த விவகாரத்தில் இர்பானிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு