கரப்பான்கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கேவுக்கு டைபாய்டு; போராட்டம் தொடரும் என அறிவிப்புபூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கேவுக்கு டைபாய்டு காய்ச்சல் - போராட்டம் தொடரும் என உறுதி
'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 'நீட்' தேர்வு தோல்வியால் மாணவர்கள் தற்கொலை செய்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இருப்பினும், தனது உடல்நிலை போராட்டத்தின் வேகத்தை எந்த வகையிலும் குறைக்காது என்றும், இயக்கத்தின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் உறுதிபட கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.