வெளிநாடுகளில் வேலை தேடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் பணிகளை தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஓமன் நாட்டில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்ற ஆண் பணியாளர்கள் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஓமன் நாட்டில்Production, Finishing & Inspection மற்றும் Maintenance பிரிவுகளில் பணியாற்ற ஆட்கள் தேவைப்படுகின்றனர். Production பணிக்கு Melting, Moulding, Process Control மற்றும் CNC Operator பிரிவுகளில் அனுபவம் உள்ளவர்களும், Finishing & Inspection பணிக்கு Quality மற்றும் Final Inspection பிரிவுகளில் அனுபவம் உள்ளவர்களும், Maintenance பணிக்கு Mechanical அல்லது Electrical Maintenance அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். Foundry அல்லது Manufacturing Industries துறையில் அனுபவம் கொண்ட Diploma அல்லது ITI கல்வித்தகுதி பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
Advertisement
குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம்கொண்ட, 22 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.44,000 முதல் ரூ.54,000 வரை ஊதியம் வழங்கப்படும். மேலும், உணவு, விசா, தங்குமிடம் மற்றும் விமானப் பயணச்சீட்டு ஆகியவற்றை வேலை வழங்கும் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசா கிடைத்த பிறகு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு சேவைக் கட்டணமாக ரூ.35,400 செலுத்தினால் போதுமானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் ஆண் பணியாளர்கள் தங்களது Resume, கல்வித்தகுதி சான்றிதழ், பணி அனுபவச் சான்றிதழ், பாஸ்போர்ட் நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை 11.10.2026-க்குள்`ovemclnm@gmail.com` என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் இணையதளம் `www.omcmanpower.tn.gov.in` அல்லது 044-22502267 என்ற தொலைபேசி எண்ணிலும், **9566239685** என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.