சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை (ரைஃபிள்/பிஸ்டல்/ஷாட்கன்) தொடரின் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் சிறப்பான சாதனையை பதிவு செய்தனர். இதில் ஈஷா சிங் தங்கப் பதக்கத்தையும், மனு பாக்கர் வெண்கலப் பதக்கத்தையும் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர் இறுதிச் சுற்றில் தொடக்கம் முதல் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஈஷா சிங், 40 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
Advertisement
மறுபுறம், 28 புள்ளிகள் எடுத்த மனு பாக்கர் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.போட்டி முடிந்த பின்னர் தனது வெற்றி குறித்து பேசிய ஈஷா சிங், கடந்த போட்டிகளில் கிடைத்த வெற்றிகளால் தன் மீது உருவான எதிர்பார்ப்பையும் அழுத்தத்தையும் திறம்பட சமாளித்ததே இந்த சாதனைக்குக் காரணம் என்று கூறினார். மேலும், ஹாங்சோ நகரின் போட்டி சூழல் ஏற்கனவே தனக்கு நன்கு அறிமுகமாக இருந்ததால், முழு நம்பிக்கையுடன் விளையாட முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.