எண்ணூர் சுனாமி குடியிருப்பில் மின்சார பெட்டியில் திடீர் தீ விபத்து – மக்கள் அச்சம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
06 Nov 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 06 Nov 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

எண்ணூர் சுனாமி குடியிருப்பில் மின்சார பெட்டியில் திடீர் தீ விபத்து – மக்கள் அச்சம்

எண்ணூர் சுனாமி குடியிருப்பில் மின்சார பெட்டியில் திடீர் தீ விபத்து – மக்கள் அச்சம்

சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பில் அதிகாலையில் மின்சார பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்ததுடன், கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த மக்களையும் பாதுகாப்பாக மீட்டனர். எண்ணூர் சுனாமி குடியிருப்பின் 5-வது பிளாக்கில் நேற்று அதிகாலை சுமார் 5 மணியளவில் மின்சார பெட்டியில் திடீரென தீப்பற்றியது. இதைக் கவனித்த அங்கு பணியில் இருந்த தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக குடியிருப்புவாசிகளுக்கு தகவல் அளித்தனர். மின்சார பெட்டியில் இருந்து தீ பரவியதையும், கரும்புகை வெளியேறுவதையும் கண்ட பொதுமக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறினர். சிலர் படிக்கட்டுகள் வழியாக கீழே வர முடியாமல் தவித்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் எண்ணூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், கட்டிடத்திற்குள் சிக்கியிருந்தவர்களை பத்திரமாக மீட்டு வெளியே அழைத்து வந்தனர். தீயணைப்புப் படையினரின் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதிகாலை நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால் எண்ணூர் சுனாமி குடியிருப்புப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.