உக்ரைன் மீது ரஷியா நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 60 பேர் படுகாயமடைந்துள்ளனர். உக்ரைன்-ரஷியா இடையேயான போர் 4 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இந்த மோதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றன. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையேயான போர் நீடித்து வருகிறது.
Advertisement
அதேவேளை, பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று அதிகாலை உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. தலைநகர் கீவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 60 பேர் படுகாயமடைந்துள்ளனர்.