Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 27 அக்டோபர் 2026 | 10 ஐப்பசி பராபவ வருடம்

அன்பில் மகேஷ் கைது: அண்ணாமலை வரவேற்பு

அன்பில் மகேஷ் கைது: அண்ணாமலை வரவேற்பு

முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளதற்கு வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், பள்ளிக் கல்வித்துறை முறைகேடு புகார்கள் தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வித்துறை சார்ந்த முறைகேடு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. கடந்த 2023-ம் ஆண்டு திமுக பைல்ஸ் வெளியிடப்பட்டபோது, தமிழ்நாட்டில் நோபல் ஸ்டீல் நிறுவனம் மேற்கொள்ளவிருந்த ரூ.1,000 கோடி முதலீடு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினோம். ஆனால், அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு அவற்றுக்கு உரிய விளக்கம் அளிக்கவில்லை.

Advertisement
அந்த முதலீடு தமிழகத்துக்கு வராத நிலையில், அதில் முறைகேடு இருப்பதாக நாங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கும் இதுவரை பதில் கிடைக்கவில்லை. அதேபோல், அன்பில் மகேஷ் தொடர்பாகக் குறிப்பிடப்படும் உதயநிதி ஸ்டாலின் பெயரிலான அறக்கட்டளை, நோபல் குழுமத்தின் மற்றொரு நிறுவனமான நோபல் பிரிக்ஸ் செயல்பட்ட அதே முகவரியில் இயங்கி வந்ததாக வெளியான தகவல் குறித்தும் விளக்கம் அளிக்கப்படவில்லை. நோபல் பிரிக்ஸ் நிறுவனத்துக்கும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கும் இடையிலான தொடர்பு என்ன? நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் ரூ.1,000 கோடி முதலீடு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஏன் இன்னும் பதில் அளிக்கப்படவில்லை? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தவெக அரசு வெளிப்படையான விசாரணையை மேற்கொண்டு, உண்மைகளை மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு