அன்பில் மகேஷின் நீதிமன்றக் காவல் நவம்பர் 18-ம் தேதி வரை நீட்டிப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
06 Nov 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 06 Nov 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

அன்பில் மகேஷின் நீதிமன்றக் காவல் நவம்பர் 18-ம் தேதி வரை நீட்டிப்பு

அன்பில் மகேஷின் நீதிமன்றக் காவல் நவம்பர் 18-ம் தேதி வரை நீட்டிப்பு

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ரூ.400 கோடி வரை முறைகேடாகப் பணம் வசூலித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த மாதம் 26-ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனு, சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சத்தியமூர்த்தி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டு விசாரணை நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும் 10-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். இதற்கிடையே, அன்பில் மகேஷின் நீதிமன்றக் காவலை நவம்பர் 18-ம் தேதி வரை நீட்டித்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரது முந்தைய நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையிலிருந்து காணொலி வாயிலாக அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, அவரது காவலை மேலும் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.