Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 28 ஆகஸ்ட் 2026 | 12 ஆவணி பராபவ வருடம்

2030 காமன்வெல்த் போட்டி, 2036 ஒலிம்பிக் விண்ணப்பம்: அமித்ஷா தலைமையில் ஆய்வுக்கூட்டம்

2030 காமன்வெல்த் போட்டி, 2036 ஒலிம்பிக் விண்ணப்பம்: அமித்ஷா தலைமையில் ஆய்வுக்கூட்டம்
2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதேபோல், 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான நாட்டின் விண்ணப்பம் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய விளையாட்டுத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, குஜராத் துணை முதல்-மந்திரி ஹர்ஷ் சங்கவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டம் தொடர்பாக அமித்ஷா தனது ‘எக்ஸ்’ தளப் பதிவில், சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதன் மூலம் நாட்டை உலகின் முக்கிய விளையாட்டு மையமாக உருவாக்க மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.மேலும், 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான இந்தியாவின் விண்ணப்பம், 2029-ம் ஆண்டுக்கான காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2030 காமன்வெல்த் போட்டிகளை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சர்வதேச விளையாட்டுப் போட்டிகளின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பல்வேறு செயல்பாட்டுநடவடிக்கைகளைஒருங்கிணைப்பதில்மத்தியஉள்துறைஅமைச்சகத்துக்குமுக்கியபொறுப்புஇருக்கும்எனதெரிவிக்கப்பட்டுள்ளது.சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் மீண்டும் இந்தியாவில் நடைபெற உள்ளன.
Advertisement
இந்த முறை போட்டிகளை அகமதாபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2010-ம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு