‘ஹாய்’ படத்தின் அடுத்த பாடல்.. துருவ் விக்ரம் குரலில் வெளியாகிறது!
நயன்தாரா, கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் புதிய பாடலான ‘குடிகார நெஞ்சு’ இன்று வெளியாக உள்ளது.லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஹாய்’. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.இதுவரை ‘கண்ணக்குழியா’, ‘ரசகுல்லா’, ‘பச்ச புள்ள’ ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன. இவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், விஷ்ணு எடவன் வரிகளில் ஜி.வி. பிரகாஷ் குமார் பாடிய ‘கண்ணக்குழியா’ பாடல் ரசிகர்களின் கவனத்தை குறிப்பாக ஈர்த்துள்ளது.முதலில் ஆகஸ்ட் 14-ம் தேதி ‘ஹாய்’ திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு, ஆகஸ்ட் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்தது. இதுதொடர்பான சிறப்பு வீடியோவும் வெளியிடப்பட்டது.இந்நிலையில், படத்தின் அடுத்த பாடலான ‘குடிகார நெஞ்சு’ இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் சியான் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் இந்தப் பாடலை பாடியுள்ளார். அவரது குரலில் வெளியாகும் இந்தப் பாடலை கேட்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.‘குடிகார நெஞ்சு’ பாடல் இன்று மாலை **5.04 மணிக்கு** வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதனுடன், ஆகஸ்ட் 28-ம் தேதி ‘ஹாய்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்பதையும் படக்குழு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.