Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 01 அக்டோபர் 2026 | 15 புரட்டாசி பராபவ வருடம்

ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலம்: தமிழக வீராங்கனைகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் பாராட்டு

ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலம்: தமிழக வீராங்கனைகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் பாராட்டு

ஜப்பானில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் பெண்கள் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அதில் இடம்பெற்றுள்ள தமிழக வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் ஷமீனா ரியாஸ் ஆகியோருக்கும் முதல்-அமைச்சர் விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய அணியின் சாதனைக்கும், தமிழகத்தைச் சேர்ந்த இரு வீராங்கனைகளின் பங்களிப்புக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், வீராங்கனைகளின் சாதனையைப் பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் இருவருக்கும் தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
திறமை, தன்னம்பிக்கை மற்றும் தொடர் முயற்சியின் மூலம் அவர்கள் பெற்றுள்ள இந்த வெற்றி, தமிழ்நாட்டின் விளையாட்டுத் திறமைக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளதாகவும் விஜய் தெரிவித்துள்ளார். அவர்களின் சாதனை, வெற்றியை நோக்கி பயணிக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். எதிர்காலத்திலும் பல்வேறு வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் மேலும் உயர்த்த வேண்டும் என வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,640
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு