Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 05 நவம்பர் 2026 | 19 ஐப்பசி பராபவ வருடம்

வேப்பூர் ஆட்டுச் சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை

வேப்பூர் ஆட்டுச் சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள வேப்பூர் ஆட்டுச் சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை களைகட்டியது. இந்த ஒருநாள் சந்தையில் சுமார் ரூ.7 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வேப்பூரில் வாரந்தோறும் நடைபெறும் சந்தையில் ஆடுகள் விற்பனை முக்கிய இடம் பிடித்து வருகிறது. குறிப்பாக பக்ரீத், தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் ஆடுகளை வாங்குவதற்கு அதிகளவில் மக்கள் வருவதால் விற்பனை வழக்கத்தைவிட அதிகரிப்பது வழக்கம். இங்கு வெள்ளாடு, குறும்பாடு, கொடியாடு, மாலாடு மற்றும் செம்மறி ஆடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று நடைபெற்ற சிறப்புச் சந்தைக்கு அதிகாலை 2 மணி முதலே ஆடுகள் வரத் தொடங்கின. சேலம், நாமக்கல், திருச்சி, திருப்பூர், வேலூர், திருவண்ணாமலை, தேனி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் வியாபாரிகள் ஆடுகளைக் கொண்டு வந்தனர்.

Advertisement
ஆடுகளை வாங்குவதற்காக உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் பொதுமக்களும் அதிகாலை முதலே சந்தையில் திரண்டனர். இதனால் சந்தை முழுவதும் மக்கள் கூட்டம் அதிகரித்ததுடன், விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆடுகளின் வகை, எடை மற்றும் தரத்தைப் பொறுத்து விலைகள் நிர்ணயிக்கப்பட்டன. ஒரு ஆட்டின் விலை குறைந்தபட்சம் ரூ.4 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது. தீபாவளி பண்டிகைக்காக பொதுமக்களும் வியாபாரிகளும் ஆர்வத்துடன் ஆடுகளை வாங்கிச் சென்றதால் வேப்பூர் சந்தையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றது. இதன் மூலம் ஒரே நாளில் சுமார் ரூ.7 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,385
🥈 Silver ₹210.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு