Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

வார இறுதி கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு பேருந்துகள்: தமிழகம் முழுவதும் கூடுதல் சேவை

வார இறுதி கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு பேருந்துகள்: தமிழகம் முழுவதும் கூடுதல் சேவை
வார இறுதி விடுமுறையை முன்னிட்டு பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் வழக்கமான பேருந்து சேவைகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.அதன்படி, ஜூலை 24 (வெள்ளிக்கிழமை), ஜூலை 25 (சனிக்கிழமை) மற்றும் ஜூலை 26 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழகம் முழுவதும் அதிகளவில் மக்கள் பயணம் மேற்கொள்வார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு ஜூலை 24 அன்று 395 சிறப்பு பேருந்துகளும், ஜூலை 25 அன்று 330 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.அதேபோல், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு நோக்கி ஜூலை 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்களிலும் தலா 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூரிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு மொத்தம் 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளுக்கு ஜூலை 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்களிலும் தினமும் தலா 25 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.வார இறுதி விடுமுறை முடிந்து சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்பும் பயணிகளின் வசதிக்காக, ஜூலை 26 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மொத்தம் 420 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.இதுவரை கிடைத்துள்ள முன்பதிவின்படி, வெள்ளிக்கிழமை 6,487 பேரும், சனிக்கிழமை 2,387 பேரும், ஞாயிற்றுக்கிழமை 7,089 பேரும் பயணச்சீட்டு முன்பதிவு செய்துள்ளனர்.
Advertisement
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், தொலைதூர பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் [www.tnstc.in](http://www.tnstc.in)இணையதளம் அல்லது TNSTC மொபைல் செயலி மூலம்முன்கூட்டியேபயணச்சீட்டுகளைபதிவுசெய்துபயணிக்குமாறுகேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.சிறப்பு பேருந்துகளின் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து முக்கிய பேருந்து நிலையங்களிலும் தேவையான அளவில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வசதியை பயணிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு