லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ 6 நாட்களில் ரூ.55 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் அதிரடி!
பிளாக்பஸ்டர் திரைப்படங்களை வழங்கிய இயக்குநர் என்ற பெயரைப் பெற்ற லோகேஷ் கனகராஜ், தற்போது நடிகராகவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அவர் கதாநாயகனாக அறிமுகமானுள்ள ‘டிசி’ திரைப்படம், திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலில் தொடர்ந்து முன்னேறி வருகிறது.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். குறிப்பாக, படத்தின் காட்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ள பின்னணி இசையும் பாடல்களும் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன.
லோகேஷ் கனகராஜுடன் வாமிகா கேபி, சஞ்சனா மற்றும் அவினாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
6 நாட்களில் ரூ.55 கோடி வசூல்
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான ‘டிசி’, முதல் நாளிலிருந்தே வசூலில் நல்ல தொடக்கத்தைப் பதிவு செய்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் 6 நாள் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ‘டிசி’ திரைப்படம் 6 நாட்களில் உலகளவில் சுமார் ரூ.55 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜின் நடிப்பு அறிமுகத்திற்கு கிடைத்துள்ள வரவேற்புடன், தொடர்ந்து வரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.