Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 15 அக்டோபர் 2026 | 29 புரட்டாசி பராபவ வருடம்

ராஷ்டிரபதி பவனில் ‘ராமாயணா’ சிறப்புக் காட்சி? படக்குழு திட்டம் எனத் தகவல்

ராஷ்டிரபதி பவனில் ‘ராமாயணா’ சிறப்புக் காட்சி? படக்குழு திட்டம் எனத் தகவல்

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களுக்காக டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வால்மீகி இயற்றிய ராமாயணக் காவியத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், இந்தியத் திரையுலகில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ரன்பீர் கபூர் ராமர் கதாபாத்திரத்திலும், சாய் பல்லவி சீதை வேடத்திலும் நடிக்கின்றனர். யாஷ் ராவணனாகவும், ரகுல் பிரீத் சிங் சூர்ப்பனகையாகவும் தோன்றுகின்றனர். இரண்டு பாகங்களாகத் தயாராகும் இப்படத்தின் முதல் பாகம், 2026 நவம்பர் 5-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் இரண்டாம் பாகம் 2027 தீபாவளியன்று திரைக்கு வரவுள்ளது. படத்தின் இசைப் பணிகளை ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் வெளியான படத்தின் கிளிம்ப்ஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Advertisement
இந்தச் சூழலில், முதல் பாகம் வெளியாகும் நவம்பர் 5-ம் தேதியன்று டெல்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அரசியல் தலைவர்கள் மற்றும் பிற முக்கியப் பிரமுகர்களுக்காகச் சிறப்புத் திரையிடலை நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி உறுதி செய்யப்பட்டால், ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி மற்றும் இயக்குநர் நிதேஷ் திவாரி உள்ளிட்ட படக்குழுவினர் இதில் பங்கேற்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர, மும்பையில் உள்ள நீடா அம்பானி கலாசார மையத்திலும் (NMACC) சிறப்புக் காட்சிகளை ஏற்பாடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ராஷ்டிரபதி பவனில் ‘ராமாயணா’ திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல் நடைபெறுவது குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை அல்லது படக்குழு தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,515
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு