சண்டிகரில் நடைபெற்ற இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் ஓவர்களை முடிக்கத் தவறியதால் இரு அணிகளுக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அபராதம் விதித்துள்ளது. இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட 4 ஓவர்கள் குறைவாக வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணியில் இடம்பெற்ற வீரர்களின் போட்டி ஊதியத்தில் இருந்து தலா 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
அதேபோல், வெஸ்ட் இண்டீஸ் அணி 2 ஓவர்கள் குறைவாக வீசியுள்ளது. இதையடுத்து அந்த அணியின் வீரர்களின் போட்டி ஊதியத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 351 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக விளையாடி இந்தியாவின் இலக்கை எட்டி வெற்றியைப் பதிவு செய்தது.