மராத்தி திரையுலகில் நடிகையாகவும், நாட்டுப்புறக் கலைஞராகவும் புகழ்பெற்ற மது காம்பிகர் (72), உடல்நலப் பாதிப்பால் புனேயில் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவு மராத்தி திரையுலகினர் மற்றும் கலைத்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மது காம்பிகருக்கு, 2016-ம் ஆண்டு பக்கவாதம் ஏற்பட்டது. இதனால் அவரது உடலின் ஒரு பகுதி செயலிழந்தது. தொடர்ந்து உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்ட அவர், கடந்த 10 ஆண்டுகளாகப் படுக்கையில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்தார்.
Advertisement
இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காததால் புனேயில் நேற்று அவர் காலமானார். அவரது இறுதிச்சடங்குகள் புனேயில் நடைபெற்றன. மறைந்த மது காம்பிகருக்கு ஒரு மகன் உள்ளார். மராத்தி திரையுலகில் தனது நடிப்பாலும், நாட்டுப்புறக் கலைப் பங்களிப்பாலும் அறியப்பட்ட மது காம்பிகரின் மறைவுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.